தளபதியின் ரசிகர் வீட்டுக்கு திடீர் விசிட்.. சமையல் செய்து அசத்திய விஜய்யின் அம்மா...
முகப்பு > சினிமா செய்திகள்தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி ரசிகர்கள் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் அம்மா ஷோபா ரசிகரின் வீட்டுக்கு சென்று சமையல் செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் படி விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா இருவரும் தஞ்சாவூரில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது அங்கு உள்ள விஜய் ரசிகரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தோசை ஊற்றுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதியின் ரசிகரின் வீட்டிற்கே சென்று தானே சமைத்த சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
#ShobaAmma♥😍@actorvijay pic.twitter.com/Vlg5m5UzN1
— ஒட்டன்சத்திரம் தளபதி சிவா (@fearless_shiva) January 20, 2020