Breaking: தனுஷ், சன் பிக்சர்ஸ் படத்துக்காக 4 வது முறையாக பிரபல இயக்குநருடன் இணைகிறார்
முகப்பு > சினிமா செய்திகள்'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு, தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து பொங்கல் ஸ்பெஷலாக வெளியான 'பட்டாஸ்' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். 'சுருளி' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தற்போது அவர், 'பரியேறும் பெருமாள்' பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷின் 44வது படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவிருக்கிறாராம். இந்த படத்துக்கு தனுஷ் கதை திரைக்கதை, வசனம் எழுதவுள்ளாராம்.