மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி - ‘தல 60’ படத்தின் வேற லெவல் தலைப்பு இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 18, 2019 06:38 PM
அஜித் குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் மற்றும் தலைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் பூஜை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லாசியுடன் இன்று நடைபெற்றது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘வலிமை’ என பெயரிடப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
With the blessings of @SrideviBKapoor Madam, The pooja of #AK60 , hence forth titled #Valimai happened in Chennai today. A @ZeeStudiosInt @BayViewProjOffl presentation. @BoneyKapoor #HVinoth #DOPNirav @thisisysr @DoneChannel1 pic.twitter.com/yM2TFmwltN
— Suresh Chandra (@SureshChandraa) October 18, 2019