தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தில் இணையும் சாஹோ வில்லன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 21, 2019 11:18 AM
இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி கடந்த வருடம் வெளியான படம் 'பரியேறும் பெருமாள்'. கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.
இந்த படத்துக்கு கர்ணன் என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜீஷா விஜயன் நடிக்கிறார்.இவர் மலையாளத்தில் அனுராக கரிக்கின் வெள்ளம், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போது அந்த படத்தில் பிரபல நடிகரான லால் நடிக்கிறாராம். இப்பட ஷுட்டிங் வரும் டிசம்பரில் தொடங்குவதாக ட்விட்டரில் அவரே தெரிவித்துள்ளார்.
Tags : Dhanush, Mari Selvaraj, Lal