Official: முன் கூட்டியே வெளியாகிறது தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 15, 2019 06:30 PM
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் அதிகார்பூர்வ ரீமேக்கான இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாக உள்ளது.
Tags : Ajith Kumar, Thala, Nerkonda Paarvai, Yuvan Shankar Raja