''அமலாபால் பணத்துக்காக என்ன வேணாலும்....'' - அரசியல் பிரமுகர் குற்றச்சாட்டு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 05:25 PM
மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் ஹீரோயினாக நடித்து வரும் படம் 'ஆடை'. இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற ஜூலை 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நிர்வாண காட்சிகளை நீக்கக் கோரி ராஜேஷ்வரி பிரியா இன்று(17.07.2019) டிஜிபியிடம் புகார் அளித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சென்சார் இந்த படத்துக்கு A Ceritificate கொடுத்திருக்காங்க. அதனால இந்த படத்தை தடை பண்ண கோர முடியாது. ஆனால் இந்த படத்தின் டீஸர் வெளியிடுவது, போஸ்டர் ஒட்டுவது, நியூஸ் பேப்பரில் விளம்பரம் வெளியிடுவதுலாம் கூடாது. ஏன்னா அது பள்ளி மாணவர்களை பாதிக்கும்.
ஏற்கனவே அமலா பால் ஏற்கனவே நல்ல நடிகையாக எல்லோர் மனசுலயும் இருக்காங்க. இந்த மாதிரில நடிச்சு உலகம் பூரா தெரிஞ்சுடுவாங்க. நான் இப்போ தான் அரசியல் கட்சி தொடங்கியிருக்கேன்.
அவங்க வேற மாநிலத்துல இருந்து வந்திருக்காங்க. அதனால அவங்களுக்கு நம்ம கலாச்சாரம் பத்தி தெரியாது. அமலாபால் வியாபார நோக்கம் மற்றும் பணம். அதுக்காக அவங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க'' என்று தெரிவித்தார்.
''அமலாபால் பணத்துக்காக என்ன வேணாலும்....'' - அரசியல் பிரமுகர் குற்றச்சாட்டு வீடியோ