பிக்பாஸ் நடிகர் உருக்கமான பதிவு - ''6 மாசங்களுக்கு முன்னாடி வாழ்க்கை...''
முகப்பு > சினிமா செய்திகள்தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பரீட்சையமானவர் மகத்.

அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், சவால்கள் வாழ்க்கையை சுவாரசியமாக மாற்றுகிறது. ஆனால் அதுவே அதிகமாக வரும்போது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது. முதுகெலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. நன்றி சந்தீப். என்னை நம்பியதற்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
Challenges make life interesting, but it’s overcoming them that makes life meaningful. Here I am today- after a spine injury, 6 months ago The journey was tough! Thanks Sandeep, for getting me back to my feet and believing in me even on days when I barely did #AppreciationPost pic.twitter.com/av1MQkmyEw
— Mahat Raghavendra (@MahatOfficial) January 19, 2020