''நடிகரின் பெயரில் போலி அடையாள அட்டை மூலம் கஞ்சா வாங்க முயன்ற நபர்'' - வைரலாகும் செய்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படம் உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்வெலின் இந்த படம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வசூல் சாதனை புரிந்துவருகிறது.

A man had tried to purchase marijuana using fake Id of Thor

இந்த படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் ஜேம்ஸ் கேமரூனின் அவதாரை பின்னுக்கு தள்ளி முல் இடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 9 வருடங்களுக்கு முன் அவதார் நிகழ்த்திய சாதனையை தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தோர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த். கனடா நாட்டில் இவரது தோர் கதாப்பாத்திரத்தின் பெயரில் போலி ஐடி தயாரித்து ஆன்லைன் விற்பனையகத்தில் ஒருவர் கஞ்சா வாங்க முயற்சித்துள்ளார்.  இதனை அந்த ஆன்லைன் கஞ்சா விற்பனையக உரிமையாளரின் சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.