'தல 60' - வைரலாகும் தல அஜித்தின் அசத்தலான கெட்டப் Change!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

Thala 60- Salt and Pepper look to stylish Ajith's new gettup

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கும், அதில் வழக்கறிஞராக நடித்த அஜித்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றன.

இந்நிலையில், விமான நிலையத்தில், தனது வழக்கமான சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக, க்ளீன் ஷேவ் செய்து கருமையான முடியுடன், கோட் சூட் அணிந்து வந்த அஜித் குமாரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அஜித்தின் இந்த புதிய கெட்டப் ‘தல 60’ படத்திற்கானதாக இருக்க வாய்ப்புள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'தல 60' - வைரலாகும் தல அஜித்தின் அசத்தலான கெட்டப் CHANGE! வீடியோ