www.garudabazaar.com

இளம் நடிகை வெளியிட்ட வீடியோ.. ''ஆமா, எனக்கு கொரோனா பாசிட்டீவ்..'' - என்ன சொல்கிறார் தெரியுமா.?!.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகை தனது கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவாக வந்திருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 

இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் - வீடியோ வெளியிட்டார் | television actress navya swamy tested positve for covid 19 and posts a video

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவிலும் இது எதிரொலித்துள்ளது. கொரோனா வைரஸ் பாசிட்டீவாக இருப்பவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, வைரல் சங்கிலியை உடைக்கும் வேலை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே தெலுங்கில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நவ்யா சுவாமி. இவர் நடித்த நா பேரு மீனாட்சி தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகை நவ்யா சுவாமி தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. ''ஆம், எனக்கு கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. உடனே நான் எனது டாக்டரை ஆலோசித்து, என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தற்போது என் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துகொண்டு வருகிறது. இதில் எந்த அவமானமோ, பயமோ வேண்டாம். விரைவில் நான் பூரண குணமாகி வருவேன்'' என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் நவ்யா சுவாமி. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் நம்பிக்கையான வார்த்தைகளை கமன்ட் அடித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

இளம் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ் - வீடியோ வெளியிட்டார் | television actress navya swamy tested positve for covid 19 and posts a video

People looking for online information on Actress, Coronavirus Positive, Covid 19, Navya Swamy will find this news story useful.