www.garudabazaar.com

பிரபல நடிகையின் வீட்டுக்குள் புகுந்த பாம்பு.. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தனது வீட்டுக்குள் வந்த பாம்பின் வீடியோ இணையத்தில் பதிவிட்டு, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

பிரபல நடிகையின் வீட்டில் புகுந்த பாம்பு | actress soni razdan shares a video of snake in her home swimming pool

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சோனி ரஸ்தான். இவர் இயக்குநர் மகேஷ் பட்டை திருமணம் செய்து கொண்டார், இவர்களின் மகளான ஆலியா பட் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார். ஹைவே, கல்லி பாய் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று தண்ணீர் குடிக்க வந்த வீடியோவை பதிவிட்டுள்ள அவர், ''இன்று எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். முதலில் தண்ணீர் குடிக்க வந்தவர், அப்படியே குளித்துவும் விட்டு, புதர்களுக்குள் சென்றுவிட்டார்'' என கூலாக பதிவிட்டுள்ளார் சோனி ரஸ்தான். நீச்சல் குளத்தில் சுற்றி விளையாடும் பாம்பின் வீடியோவை பார்த்த ரசிகர்களை ஷாக் ஆகி கமன்ட் அடித்து வருகின்றனர். 

 

பிரபல நடிகையின் வீட்டில் புகுந்த பாம்பு | actress soni razdan shares a video of snake in her home swimming pool

People looking for online information on Alia Bhatt, Snake in House, Soni Razdan will find this news story useful.