கணவர் பீட்டர் பால் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜய்குமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Actress Vanitha shares clarification video about her husband Peter Paul | தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனித

இதனையடுத்து வனிதா விஜய்குமார் இதுகுறித்து தனது யூடியூப் சேனல் மூலம் விளக்கமளித்தார். இந்நிலையில் தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், ''பீட்டல் பால் பற்றி பல்வேறு அவதூறுகளை மீடியாவில் பேசுகிறார்கள். மேலும் அவர் குடிகாரர் என்றும் சொல்கிறார்கள்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமில்லை. அவர் மாமிசம் கூட சாப்பிட மாட்டார். கல்யாணத்தின் போது ஓபன் பண்ண Champagne பாட்டிலை கூட அவர் குடிக்கவில்லை. அந்த வீடியோ கூட இப்பொழுது இருக்கு. அதை உங்களுக்காக ரிலீஸ் பண்றேன்'' என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

கணவர் பீட்டர் பால் மீதான குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனிதா வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Actress Vanitha shares clarification video about her husband Peter Paul | தனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் வெளியிட்ட வனித

People looking for online information on Peter Paul, Vanitha Vijaykumar will find this news story useful.