வனிதா - பீட்டர் பால் விவகாரம்.. 'வனிதா விஜயகுமாருடன் ஏன் சண்டை.?' - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வனிதா - பீட்டர் பால் திருமணம் குறித்து பேசியது பற்றி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பளீச் விளக்கம் கொடுத்துள்ளார். 

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெளிவான பதில் | actress lakshmi ramakrishnan opens on vanitha vijaykumar - peter

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் என்பவருக்கு ஹெலன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் முறையான விவகாரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என அவரது முதல் மனைவி புகாரளித்தார். இதையடுத்து இதுகுறித்து நடிகையும் இயக்குநருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்துக்கு நடிகை வனிதா கடுமையான ரிப்ளை கொடுத்தது, சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ''நான் எத்தனையோ நல்ல விஷயங்களை பற்றி பதிவிட்டிருக்கிறேன். ஆனால், எதற்கும் இப்படி ஒரு கவணம் கிடைக்கவில்லை. நான் வனிதாவின் முடிவுகளை பற்றி பேசவில்லை. அவர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் விமர்சிக்கவில்லை. அவரின் வாழ்க்கை சந்தோஷமாக மாறுகிறது என்று நினைத்து நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், நான் சொன்னது, முறையாக டைவர்ஸ் வாங்காமல் திருமணம் செய்ய கூடாது என்பது தான். பீட்டர் பாலின் முன்னாள் மனைவி கொடுத்த இன்டர்வியூவை பார்த்த பிறகு, இவ்வளவு படித்த, அறிவுள்ள, தைரியசாலியான வனிதா, இந்த தவறை செய்யலாமா என்ற ஆதங்கத்தில்தான் நான் அதை பதிவிட்டேன்'' என தெளிவாக தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் விரிவாக பேசிய வீடியோ இதோ. 

வனிதா - பீட்டர் பால் விவகாரம்.. 'வனிதா விஜயகுமாருடன் ஏன் சண்டை.?' - லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பளீச். வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தெளிவான பதில் | actress lakshmi ramakrishnan opens on vanitha vijaykumar - peter

People looking for online information on Lakshmi Ramakrishnan, Peter Paul, Vanitha, Vanitha Vijaykumar will find this news story useful.