முதன் முறையாக இந்த முன்னணி ஹீரோயினுடன் இணையும் ஜெயம் ரவி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 03:01 PM
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 90 கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டிவிடுவது போல் அமைந்துள்ள இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனையடுத்து ஜெயம் ரவி மனிதன், என்றென்றும் புன்னகை படங்களின் இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் இன்று (ஆகஸ்ட் 21) அஸெர்பைஜான் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் டாப்ஸி கலந்துகொள்கிறார்.
Tags : Jayam Ravi, Tapsee pannu, Ahmed