தமிழகத்தில் ஜெயம் ரவியின் 'கோமாளி' படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 06:45 PM
அடங்க மறு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை கார்த்திக் தங்கவேலு இயக்க, ஹிப்ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையைமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால், யோகிபாபு, ஷாரா, ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் நேற்று (ஆகஸ்ட் 15) தமிழகத்தில் மட்டும் ரூ.5.46 கோடி வசூலித்துள்ளதாம். ஜெயம்ரவிக்கு படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கோமாளிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
Tags : Jayam Ravi, Comali, Hiphop Tamizha