தமிழகத்தில் 4 நாட்களில் 'கோமாளி' படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 19, 2019 02:46 PM
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க, பிரதீப் இ ராகவ் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் சென்னையில் 4 நாட்களில் ரூ.1.7 கோடி வசூலித்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த படம் ரூ.18.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags : Comali, Jayam Ravi, Hiphop Tamizha