''அடடட... ஆரம்பமே..... இப்போ அதிருதடா!'' - தல அஜித் படத்துக்காக யுவனுடன் இணைந்த National award winner
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 18, 2019 12:29 PM
'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தல அஜித் ஹீரோவாக நடித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
![Pa.Vijay associates with Thala Ajith and Yuvan Shankar Raja Pa.Vijay associates with Thala Ajith and Yuvan Shankar Raja](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/pavijay-associates-with-thala-ajith-and-yuvan-shankar-raja-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ்ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் வானின் இருள் என்ற பாடலை தீ பாட, உமா தேவி அந்த பாடலை எழுதியுள்ளார். மற்றொரு பாடலனா ஈடிஎம் என்ற பாடலை நாகர்ஜூனா என்பவரும் யூனோ என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் குறித்து பா.விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் யுவனுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், யங் மேஸ்ட்ரோ யுவனுடன் ஒரு எனர்ஜிடிக் சந்திப்பு. வினோத்தின் நேர்கொண்ட பார்வைக்காக'' என்று பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த சந்திப்பு பாடலுக்காகவா அல்லது வேறு ஏதேனும் சந்திப்புக்காகவா என்பது போன்ற எந்த குறிப்பும் அதில் இல்லை.