RRR Others USA
www.garudabazaar.com

'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடியோ உரிமம்.. மிகப்பெரிய விலைக்கு வாங்கிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

T Series has acquired Ponniyin Selvan Movie Audio Rights

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

T Series has acquired Ponniyin Selvan Movie Audio Rights

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் பிரம்மாண்டமான A R ரஹ்மான் இசையில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து மொழி ஆடியோ இசை உரிமைகளையும் டி சீரிஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

T Series has acquired Ponniyin Selvan Movie Audio Rights

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

T Series has acquired Ponniyin Selvan Movie Audio Rights

People looking for online information on A R Rahman, ARR, Karthi, Maniratnam, Ponniyin Selvan, PS1, T Series, Vikram will find this news story useful.