"என் அன்பனுக்கு.." மறைந்த கணவர் பிறந்தநாளை உருக்கத்துடன் கொண்டாடிய ஆனந்த கண்ணன் 'மனைவி'..
முகப்பு > சினிமா செய்திகள்1990 காலகட்டத்தில் பிறந்தவர்களை 90 ஸ் கிட்ஸ் என்ற பெயரில் அதிகம் ட்ரோல் செய்து வந்தாலும், அவர்கள் சிறு வயதில் அனுபவித்த பொற்காலத்தை வேறு எந்த ஒரு கிட்ஸ்ஸும் அனுபவித்திருக்க மாட்டார்கள்.
அவர்களின் குழந்தை காலங்களில், பல விளையாட்டுகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் என மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வந்தனர்.
அந்த வகையில், டிவி நிகழ்ச்சிகள் மூலம், பல பிரபலங்கள் நன்கு பரிச்சயம் ஆகி இருந்தாலும், பலரின் பேவரைட் ஆக இருந்தவர் ஆனந்த கண்ணன் தான். பல 90 ஸ் கிட்ஸ்களின் விருப்பமான டிவி தொகுப்பாளராகி இருந்த ஆனந்த கண்ணன், சன் மியூசிக் தொடங்கிய காலகட்டத்தில் அதில் தொகுப்பாளராக இருந்தவர்.
திடீர் மறைவு
இதன் பின்னர், சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ள ஆனந்த கண்ணன், சினிமா பக்கமும் தலை காட்டி இருந்தார். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஆனந்த கண்ணன், அதற்கு வேண்டி சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிகிச்சை பலனின்றி திடீரென மரணம் அடைந்தார். தன்னுடைய 48 ஆவது வயதிலேயே இப்படி ஒரு முடிவு நேர்ந்ததை எண்ணி, அவரது ரசிகர்கல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மனைவியின் உருக்கமான போஸ்ட்
அதே போல, பல சினிமா பிரபலங்களும், ஆனந்த கண்ணன் மறைவுக்கு மிகவும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே, ஆனந்த கண்ணன் மறைந்து, சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, அவரது பிறந்தநாள் தினமான இன்று, அவரின் மனைவி ராணி கண்ணா போட்டுள்ள இன்ஸ்டா பதிவு, மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.
கணவரின் மறைவுக்கு பிறகு, அவரின் முதல் பிறந்தநாள் தினமான இன்று, கையில் கேக்குடன் இருக்கும் ஆனந்த கண்ணன் புகைப்படத்தை பகிர்ந்து, "Happy Birthday to my love!. எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!" என குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமில்லாமல், கடந்த ஒரு மாதத்திற்கு முன், தங்களுடைய திருமண நாள் வந்த போதும், கடந்த ஆண்டு திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து, "நீங்கள் விட்டுச் சென்ற காதலில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
ஆதரவளிக்கும் ரசிகர்கள்
ஆனந்த கண்ணாவின் மறைவு, அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து கூட இன்னும் மறைந்து போகாத நிலையில், அவரது மனைவியால் கூட, நிச்சயம் கணவரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாது என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே போல, ஆனந்த கண்ணன் மறைந்த பிறகு வரும் ஒவ்வொரு ஸ்பெஷல் தினத்தன்றும் கணவரை நினைத்து உருகும் மனைவி ராணி கண்ணாவுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களைக் கூறி, முழு ஆதரவினையும் அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.
"என் அன்பனுக்கு.." மறைந்த கணவர் பிறந்தநாளை உருக்கத்துடன் கொண்டாடிய ஆனந்த கண்ணன் 'மனைவி'.. வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Aishwarya Rajinikanth Emotional Status About Her Sons
- Aishwarya Rajinikanth Emotional Status About Her Sons
- Premalatha Birthday Celebration Captain Vijayakanth With His Family
- Puneeth Rajkumar Fans Get Emotional As James Film Releases On His Birthday
- Puneeth Rajkumar Fans Emotional James Release On His Birthday
- Actor Sarathkumar Emotional Status On Puneeth Rajkumar
- Actor Master Mahendran Birthday Wish To Lokesh
- Actor Master Mahendran Birthday Wish To Lokesh
- Lokesh Kanagaraj Emotional Photo With His Friend
- Surya Emotional Speech In Karthi Uzhavan Foundation Programme
- Dhanush Naane Varuven New Poster On Selvaraghavan Birthday
- Aadhvik Ajith Kumar Birthday Party Photos Went Viral
தொடர்புடைய இணைப்புகள்
- இறந்த கணவரின் Birthday-வை கண்ணீருடன் பகிர்ந்துகொண்ட Anandha Kannan Wife 😢😥😥
- യാചക സ്ത്രീയോടൊപ്പം പിറന്നാൾ ആഘോഷിച്ച് JAI BHIM സിനിമയിലെ കുഞ്ഞ് താരമായ JOSHIKAMAYA .❤️
- മകളുടെ ഒന്നാം പിറന്നാൾ ഗംഭീരമായി ആഘോഷിച്ച് പേർളിയും ശ്രീനിഷും.🥰🥰
- വിദ്യാർത്ഥികൾ ചെയ്ത പുണ്യ പ്രവൃത്തി . ദാഹിച്ചു വലഞ്ഞ കൊച്ചു പെൺകുട്ടിക്ക് ദാഹജലം നൽകി
- നിത്യവും 1000 രൂപയുടെ ഭക്ഷണം തെരുവ് നായ്ക്കൾക്ക് വിളമ്പി തളിപ്പറമ്പ്കാരൻ രാഘവേട്ടൻ👌👌
- Pugazh Teaches Irfan Ultimate Dance Moves!🕺IRFAN Vs PUGAZH LIVE Chicken Challenge🍗LOL🤣
- ചെറിയ കാര്യങ്ങളിൽ സന്തോഷം കണ്ടെത്തി ലളിതമായി പിറന്നാൾ ആഘോഷിച്ച് ആലിയ ഭട്ട്.
- "சாட்டை அடிச்சு ரத்தம் சிந்தினா தான் 1 ரூபாய் போடுவாங்க சார்" சாட்டை அடிப்பவர்களின் உருக்கமான
- നാളുകൾക്ക് ശേഷം ശാലിനിയോടൊപ്പമുള്ള ചിത്രം ആരാധകർക്കായി പങ്കുവെച്ച് നടൻ അജിത്
- "நானும் மனிதனா இருந்து இருந்தா"🥺-அங்காடி தெரு கருப்பையா
- വിവാഹദിനത്തിൽ ദേവതയെ പോലെ അണിഞ്ഞൊരുങ്ങി വധു. കണ്ണു നനയിക്കുന്ന Makeup Video.
- അമ്മക്ക് മകളോടുള്ള സ്നേഹത്തിന് അതിർവരമ്പുകൾ ഇല്ല. ഹൃദ്യമായ കുറിപ്പുമായി ശില്പ ഷെട്ടി.