RRR Others USA
www.garudabazaar.com

ஆண்கள் கொண்டாட படமே இல்லயா?.. ”இதோ இருக்குடா அம்பி”.. பிரேம்ஜி போட்ட வைரல் மீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மன்மதலீலை படத்தை பற்றி நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ள மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

Premgi venkatprabhu manmadha leelai viral meme

”கொரோனா காலத்தில் முத்தக் காட்சிகளை எடுத்தோம்”… அசோக்செல்வன் ஜாலி பேச்சு! –மன்மத லீலை Press meet

செனை 28 to மாநாடு

இளையராஜா – கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசுகளில் இசைத்துறையை விடுத்து இயக்கத்தில் சாதித்தவர் வெங்கட்பிரபு.  நடிகராக 90 களிலும் 2000 களிலும் சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும், அவரின் இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து பரவலாக கவனிக்கப்பட்டார் வெங்கட்பிரபு. அதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய படங்கள் அவருக்கு முக்கியமானப் படங்களாக அமைந்தன.

Premgi venkatprabhu manmadha leelai viral meme

மாநாடுக்குப் பின் மன்மதலீலை…

கடந்த ஆண்டு இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதற்குப் பின் இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

Premgi venkatprabhu manmadha leelai viral meme

படம் எப்படி இருக்கும்…?

இந்த படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு ‘என்னுடைய உதவியாளர் மணிவண்ணனின் கதை தான் இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்ற போது இந்தக் கதை வந்தது. அசோக் செல்வனை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன். உடனே செய்யலாம் என்றார். இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

Premgi venkatprabhu manmadha leelai viral meme

பிரேம்ஜி பகிர்ந்த மீம்…

சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரேம்ஜி அமரன் பல நகைச்சுவையான ஸ்டேட்டஸ்களைப் பகிர்ந்து வருபவர். இதற்கென்றே அவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. அதே போல மற்றவர்களின் பதிவுகளிலும் சென்று குறும்பாக ஏதாவது கமெண்ட் போட்டுவிட்டு வருவார். இந்நிலையில் தற்போது இந்த படத்தை முன்னிட்டு இசையமைப்பாளரும் நடிகருமான பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ள மீம் ஒன்று கவனத்தைப் பெற்று வருகிறது.  இந்த மீமை இயக்குனர் வெங்கட்பிரபுவும் தன்னுடைய பக்கத்தில் பகிர, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Premgi venkatprabhu manmadha leelai viral meme

ரசிகர்கள கண்ட்ரோல் பண்ண…. RRR ரிலீஸ் ஆகும் தியேட்டர்ல முள்வேலி ? வைரல் pic!

Premgi venkatprabhu manmadha leelai viral meme

People looking for online information on Manmadha Leelai, Manmadha leelai meme, Morattu single, Premgi, Premji amaren, VenkatPrabhu will find this news story useful.