www.garudabazaar.com

கார்த்தியுடன் நடிக்க சென்னைக்கு வந்த பிரபல முன்னணி நடிகை..! வேறலெவல் போட்டோ.. செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நடிக்க பிரபல நடிகை சென்னை வந்துள்ளார்.

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும். கடைசியாக கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் திரை அரங்கில் வெளியானது. சர்தார் படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

பின்னர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன், விருமன் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொண்டார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

சென்னையில் சர்தார் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. 

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

இந்நிலையில் இந்த படத்தின் சென்னை படப்பிடிப்புக்கு நடிகை ராஸிகண்ணா விமானம் மூலம்  சென்னை வந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஸிகண்ணா அறிவித்துள்ளார். ராஷி கண்ணா தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான ‘மெட்ராஸ் கஃபே’ மூலம் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினாலும், இப்போது அவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து தனது முத்திரையை பதித்துள்ளார்.

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பு நிறைவுற்றதும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Raashi Khanna joining to Karthi Starring Sardar shooting

People looking for online information on Chennai, Karthi, Raashi kanna, Sardar, Sardar Shooting will find this news story useful.