RRR Others USA
www.garudabazaar.com

"விரைவில் அந்தகன்.. பிறகு பிரசாந்துக்கு டும் டும் டும்" – தந்தை தியாகராஜன் சொன்ன குட் நியூஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தனது மகன் பிரசாந்தின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

Thyagarajan talked about actor prashanth marriage

அந்தகன் ஆன அந்தாதூன்…

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் 'அந்தாதூன்' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக். இந்த படத்தில் நடிகர் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Thyagarajan talked about actor prashanth marriage

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணு கைப்பற்றியுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் வெளியாக உள்ளதால் அந்தகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Thyagarajan talked about actor prashanth marriage

கவனத்தை ஈர்த்த பாடல்

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான என் காதலும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இதுவரை இணையத்தில் 2.2 மில்லியன் பேருக்கு மேல் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

தியாகராஜன் சொன்ன குட் நியூஸ்…

இந்நிலையில அந்தகன் படத்தின் ரிலீஸை ஒட்டி இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமை கொண்ட தியாகராஜன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரசாந்தின் திருமனம் குறித்து பேசியுள்ளார்.  அதில் ‘பிரசாந்துக்கு அந்தகனுக்குப் பிறகு அடுத்து உடனடியாக செய்யவேண்டியது அவரின் திருமனம்தான். அவருக்கு நிறைய படங்கள் பண்ணனும்’ எனக் கூறியுள்ளார்.  நடிகர் பிரசாந்துக்கு ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரோடு திருமணம் நடந்தது.  அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. ஆனால் அந்த தம்பதியினர் சில ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thyagarajan talked about actor prashanth marriage

Thyagarajan talked about actor prashanth marriage

People looking for online information on Andhadhoon, Andhagan, Prshanth, Thyagarajan will find this news story useful.