மீண்டும் இணையும் 'செல்வராகவன் - தனுஷ்'? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 08, 2019 11:09 AM
இயக்குநர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன?' போன்ற படங்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மேலும் செல்வராகவனின் கதை, திரைக்கதை எழுதி, தனுஷ் நடிப்பில் உருவான 'யாரடி நீ மோகினி' திரைப்படமும் ஹிட்டாக அமைந்தது. இந்நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது.
இதனையடுத்து தனுஷ் - செல்வரகாவன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கவிருக்கிறாராம்.
தற்போது மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் படத்துக்கான கதை விவாதம் நடைபெற்று வருகிறதாம். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கான படப்பிடிப்புத் தளங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறதாம்.