பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் அடுத்தப்படம் குறித்த தகவல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்த பரியேறும் பெருமாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Pa Ranjith's Neelam Productions Next Hero Actor Roshan

அதனைத் தொடர்ந்து தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு என்கிற படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ரஞ்சித்திடம் உதவியாளராக இருந்த அதியன் ஆதிரை இயக்குகிறார்.

மேலும் கலையரசன் நாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்குகிறார்.அதனைத் தொடர்ந்து மெட்ராஸ் படத்தில் ஜானி என்கிற வேடத்தில் நடித்திருந்த ஹரி கிருஷ்ணன்   ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை பாஸ்கர் சாமி இயக்குகிறாராம்.

இந்நிலையில் தற்போது பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார் இப்படத்தில் ஹிரோவாக  "ஜினியஸ்" படத்தில் நடித்த ரோஷன் நடிக்க அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார், என்று தகவல் கிடைத்துள்ளது.