லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட டைட்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுடன் இணையும் SK17 திரைப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார்.

Nayanthara 65th Film Netrikann Produced by Vignesh Shivan

மேலும், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணையும் நெட்ஃபிலிக்ஸ் Anthology புராஜெக்ட்டிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட விக்னேஷ் சிவன், சமீபத்தில் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளரானார். இயக்குநர் மிலிந்த் ராவின் இரண்டாவது படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாராவும், ‘Sacred Games' புகழ் நடிகர் லூக் கென்னி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது, இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சென்னையில் இன்று தொடங்கி உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு "நெற்றிக்கண்" என டைட்டில் வைத்துள்ளனர்.

கவிதாலயா  தயாரிப்பில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து  1981-ம் வருடம் வெளியான படம் "நெற்றிக்கண்'' என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் பல இந்த முதற்கட்ட ஷூட்டிங்கில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தளபதி விஜய்யின் ‘பிகில்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.