நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டாரா? சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கஸின் சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஜூன் 14-ம் தேதி மரணித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இழப்பு பேரிடியாக அவரது குடும்பத்தாரைத் தாக்கியுள்ளது. நிறைய படங்களில் நடிக்காவிட்டாலும் நிறைவான படங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு.

Sushant Singh rajput planned to get married in November

சொந்த வாழ்க்கையைப் பொருத்தவரை, இளம் வயதில் தாயை இழந்து தவித்தவர் சுஷாந்த். அவரது தந்தை கிருஷ்ண குமார் சிங் அவரை நன்றாக படிக்க வைத்து வளர்த்தார். சினிமா ஆசை திடீரென்று அவருக்கு ஏற்பட்ட, நடன வகுப்பிலும் தியேட்டரில் சேர்ந்தார். இவை எதையும் ஒருபோதும் அவரது குடும்பத்தினர் மறுக்கவில்லை. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்திரவு நிலவி வந்ததால் மும்பையில் அவரது வீட்டில் தனிமைப்பட்டுவிட்டார் சுஷாந்த்.

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுஷாந்த் சிங் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்னால் எப்படி இந்த தற்கொலை முடிவை எடுத்தார் என்று புரியாமல் குடும்பத்தினர் குழம்பியுள்ளனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணத்தை முடிக்க நினைத்திருந்தனர்.

இந்நிலையில் நவம்பரில் நிச்சயம் திருமணம் செய்வேன் என்று சொல்லியிருந்த சுஷாந்த் யாரை மணக்கவிருக்கிறார் என்று சொல்லியிருக்கவில்லை. ஆனாலும் குடும்பத்தார் அவரது முடிவை ஏற்று மனரீதியாக தயார் நிலையில்தான் இருந்துள்ளனர் என்றார் அவரது கஸின்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. லாக்டவுனுக்கு முன்னால் சில நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக போயிருக்கிறார்கள். புதிய படமொன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. இது குறித்து அவர்களிடம் கேட்டபோது நாங்கள் நல்ல நண்பர்கள் என்று இருவரும் தெரிவித்து வந்தார்கள்.

சுஷாந்த் ரியா சக்ரபர்த்தியை தான் திருமணம் செய்ய முடிவு செய்தாரா என்று தெரியாத நிலையில், கடைசியாக அவர் ரியாவுக்கு ஃபோன் செய்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை ரியா எடுக்கவில்லை.  மறுநாள் சுஷாந்த் இறந்த நிலையில் இருப்பார் என்று அப்போது ரியாவுக்கு மட்டுமல்ல ஒருவருக்கும் தெரிந்திருக்காது. இந்த இளம் நடிகரின் மரணத்துக்குக் காரணம் விதி என்பதா அல்லது அவரின் ஃபுரொபஷனல் எதிரிகளின் சதியா என்பது போலீஸ் விசாரணையில் விரைவில் தெரிய வரும்.

கை போ சே, எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி மற்றும் சிச்சோர் உள்ளிட்ட சில அற்புதமானபடங்களில் நடித்துள்ளார் சுஷாந்த். அவரது மறைவு எண்ணற்ற ரசிகர்களை மனம் கலங்கச் செய்துவிட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Sushant Singh rajput planned to get married in November

People looking for online information on Lockdown, Love affair, Sushant Singh will find this news story useful.