ரிலீஸ் தேதிக்கு முன்னாடியே படம் வெளியாகப் போகுதா? ரசிகர்கர்களுக்கு கொண்டாடம்தான்!
முகப்பு > சினிமா செய்திகள்பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வரவிருந்த ஜேம்ஸ் பாண்ட் பட வரிசைகளில் 25-ஆவது படமான ''நோ டைம் டு டை'' (No Time To Die) படத்தின் வெளியீட்டு தேதி கொரோனா வைரஸ் தொற்றுப் பிரச்சனையால் நவம்பர் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக 5-வது முறையாக டேனியல் க்ரேக் நடித்துள்ளார். இதற்கு முன்னர் கேசினோ ராயல் (2006), குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008), ஸ்கைஃபால் (2012) மற்றும் ஸ்பெக்டர் (2015) ஆகிய படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளார் டேனியல் க்ரேக்.
தற்போது நோ டைம் டு டை படம் ரிலீஸ் தேதிக்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே, அதாவது நவம்பர் 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'பழைய நண்பர்கள் நோ டைம் டு டை படத்தில் இணைகிறோம். பிரிட்டனில் நவம்பர் 12, அமெரிக்காவில் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில்' என்று ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் பதிவிட்டுள்ளனர்.
டைம் டு டை படத்தில் நடிப்பதுடன் 007 ரோலுக்கு விடை கொடுக்கப் போவதாக டேனியல் கிரேக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
The return of old friends in NO TIME TO DIE.
In cinemas 12th November UK, 20th November US. pic.twitter.com/GkXugGEAba
— James Bond (@007) June 13, 2020
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Honor Blackman James Bond Actress Dies Condolences Pour
- Daniel Craig Dream Role! James Bond Vs Super Heroes
- James Bond Actress Olga Kurylenko Tested Positive For Corona Virus
- James Bond No Time To Die Release Delayed Due To Coronavirus Outbreak
- Man Arrested In James Bond 25 Shooting Spot In England
- Daniel Craig's James Bond 25's Set Spy Camera Controversy
- Daniel Craig To Receive 50 Million For Bond 25
- Danny Boyle To Direct James Bond 25
- Danny Boyle Is The Frontliner To Direct James Bond 25
- James Bond Franchise’s 25th Film Story Details Said To Be Leaked.
- Daniel Craig’s Wife Actress Rachel Weisz Insists On Cutting Down On Dangerous Stunts
- Daniel Craig Reportedly Signs Two Other Bond Films.