சுபம்..! - ‘சூரரைப் போற்று’ டீமிற்கு சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 25, 2019 04:17 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில். தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் மற்றும் டெக்கினிசியன் அனைவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கி உள்ளார் நடிகர் சூர்யா.