இந்த படத்துக்காக பிரபல நடிகருடன் இறுதிச்சுற்றில் சூர்யா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 25, 2019 11:50 AM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதையடுத்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்.
‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. ‘இந்தியாவின் முத்துநகரம்’ என அழைக்கப்படும் ஹைதராபாத்தில் தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த ஷெடியூலில் நடிகர் மோகன் பாபு கலந்துக் கொள்வார் என தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் விஷ்ணு மஞ்சு ஆகியோருடன் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஷெடியூலுடன் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.