ஜெனிலியாவின் கணவர் எச்சரிக்கை - ''சாவுக்கு பக்கத்துல போய்ட்டு வந்துட்டேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் 'சச்சின்', 'வேலாயுதம்', தனுஷூடன் 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

Genelia's husband Riteish Deshmukh shares a video about her

குறிப்பாக 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் வெகுளிப்பெண்ணாக அவர் அடித்த லூட்டிகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இப்பொழுதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்துக்கு முக்கிய இடமுண்டு.

இந்நிலையில் இவருக்கும் ஹிந்தி நடிகர் ரித்தேஷிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ரித்தேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரித்தேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெனிலியா ரித்திஷிடம், ''நீ என்னை லவ் பன்றியா என்று கேட்க அதற்கு ரித்திஷ், இல்ல நான் வேறொருத்தர லவ் பண்றேன்'' என்கிறார்.

உடனே ஜெனிலியா கோபமாகிறார். பின்னர் ஜெனிலியாவை சமாதனப்படுத்த, ''உன் ஸ்மைலை லவ் பண்றேன் என்று சொல்லி தப்பிக்கிறார். பின்னர் நம்மிடம் மரணத்துக்கு அருகில் சென்று வந்துருக்கேன்'' என பயத்துடன் தெரிவிக்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WARNING ⚠️ ‘DO NOT’ try this stunt at home ......@geneliad

A post shared by Riteish Deshmukh (@riteishd) on

Entertainment sub editor