சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல் - காப்பான் இசை வெளியீட்டு விழா அப்டேட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 07:27 PM
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிறிக்கி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக காப்பான் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை.21ம் தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் பிரம்மாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Announcement 📣 of The Grand Audio 🥁 Launch of #KAAPPAAN - tomorrow morning at 11am 🔥. Get Ready to celebrate @Suriya_offl 🌟 Birthday 🎉🎉🎊🎊@anavenkat @Mohanlal @Jharrisjayaraj @arya_offl @sayyeshaa @bomanirani @thondankani @SonyMusicSouth
— Lyca Productions (@LycaProductions) July 16, 2019