'அயன்', 'மாற்றான்' படங்களுக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் பிரபல மலையாள ஹீரோ மோகன்லால், ஆர்யா, சாயீஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, எம்.எஸ்.பிரபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து தற்போது சிரிக்கி என்ற பாடல் வெளியாகியுள்ளது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ஞானகரவேல் எழுத, செந்தில் கணேஷ், ரமணி அம்மாள் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடலின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சூர்யாவின் காப்பானில் இருந்து செம குத்துப் பாடல் இதோ ! வீடியோ