‘உலக சினிமா வரலாற்றில்.. halfboil சாப்பிட்டு லவ் சொன்ன மயிலாப்பூர் மாமி’ - சந்தானத்தின் A1 டீசர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘A1' திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.

Santhanam starring A1- Accused No. 1 film second teaser has been released

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் 4வது சீசன் வெற்றியாளரான ஜான்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்  A1 திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார். இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சனை மிஞ்சும் நடனம், பல்லு பறக்கும் சண்டைக் காட்சிகள், இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம் ‘A1' என வித்தியாசமான டோனில் இந்த டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை.26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் வழக்கமான காமெடி டைமிங் வசனங்கள் கொண்ட இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

‘உலக சினிமா வரலாற்றில்.. HALFBOIL சாப்பிட்டு லவ் சொன்ன மயிலாப்பூர் மாமி’ - சந்தானத்தின் A1 டீசர் இதோ வீடியோ