"கெட்ட வார்த்த பேசுனதுக்கு Sorry..." - மேடையில் கொந்தளித்த சூர்யா வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூகத்தில் உள்ள பல பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக குரல் கொடுப்பவர்.

Suriya About NEET & Schools Implementing Coaching Centrer

தற்போது அவர் நீட் தேர்வு மற்றும் புதிய கல்வி கொள்கை பற்றிபேசியுள்ளார். அவர் நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் விழாவில் பேசிய அவர் 30 கோடி மாணவர்கள் வாழ்க்கையை பாதிக்கும் விஷயம் புதிய கல்வி கொள்கை எனகூறியுள்ளார்.

கிராமங்களில் 1 ஆசிரியர் மற்றும் 10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் மூடப்படும் என கூறுகின்றனர். அவர்கள் எங்கே போவார்கள்? மூன்று வயதிலேயே மூன்று மொழிகளை திணிப்பது தவறு.

30 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படிக்கிறார்கள். அவர்கள் எப்படி தேர்வுகள் எழுதுவார்கள். அத்தனை தேர்வுகளை தாண்டி, அதை மயிருனு தூக்கிபோட்டுட்டு (கெட்ட வார்த்தை பேசியதற்கு சாரி), வேறு ஒரு நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். கற்பித்தலை நிறுத்திவிட்டு அனைத்தும் இனி கோச்சிங் சென்டர்களாக மாறிவிடும் என சூர்யா ஆவேசமாக பேசியுள்ளார்.

"கெட்ட வார்த்த பேசுனதுக்கு SORRY..." - மேடையில் கொந்தளித்த சூர்யா வீடியோ இதோ ! வீடியோ

Tags : Suriya