சூர்யாவின் Multi Starrer படத்தை கைப்பற்றிய சன் டிவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Sun TV acquires the satellite rights of Suriya's Kaappaan

‘அயன்’, ‘மாற்றான்’ திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘காப்பான்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர், முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிறிக்கி’ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா பிசியாக நடித்து வருகிறார்.