ஜோதிகாவின் புதுப்படத்துக்கு விஜய்யின் ஹிட் பாடல் டைட்டில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா நடிப்பில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியான படம் 'ராட்சசி'. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, கௌதம் ராஜ் இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார்.

Jyothika and Suriya's new film title is Ponmagal Vanthal

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் பின்னணி இசையமைத்திருந்தார். கீதா ராணி என்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜோதிகா. 

இதனையடுத்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.  இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்குகிறார்.இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்துக்கு 'பொன்மகள் வந்தாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.