VTK D Logo Top
www.garudabazaar.com

BREAKING: 5 வேடங்களில் நடிக்கும் சூர்யா?! சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தின் அதிரடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Suriya Will Be Playing All the Five Characters in Siruthai Siva Movie

Also Read | ஒரே மாசத்துல நடிகர் அஜித் இத்தனை ஊருக்கு போயிருக்காரா? MAP உடன் வெளியான சூப்பர் தகவல்!

நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும்  திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Suriya Will Be Playing All the Five Characters in Siruthai Siva Movie

மோஷன் போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக தோன்றி இருந்தார்.  DSPயின் பின்னணி இசையும் விஷூவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்தது.  "வலிமை மிகு வீரம்" எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்தது.

Suriya Will Be Playing All the Five Characters in Siruthai Siva Movie

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான முறையில் உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார்.  இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.  இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் கோவாவில் துவங்க உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Suriya Will Be Playing All the Five Characters in Siruthai Siva Movie

கோவாவில் 250 பவுன்சர்களுடன் சூர்யா சண்டையிடும் அதிரடி சண்டைக்காட்சி படமாக்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்ட அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் ஆகிய 5 கதாபாத்திரத்திலும் நடிகர் சூர்யாவே நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Also Read | நானே வருவேன் படத்தின் டீஸர்.. வித்தியாசமான லுக்கில் மிரட்டிய தனுஷ் & செல்வராகவன்! மரண மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Will Be Playing All the Five Characters in Siruthai Siva Movie

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42 Movie Updates will find this news story useful.