VTK D Logo Top
www.garudabazaar.com

நானே வருவேன் படத்தின் டீஸர்.. வித்தியாசமான லுக்கில் மிரட்டிய தனுஷ் & செல்வராகவன்! மரண மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் டீஸர்  வெளியாகி உள்ளது.

Dhanush Selvaraghavan Naane Varuvean Movie Teaser Released

Also Read | PS1: சோழ சிம்மாசனத்திற்கான சண்டை.. "பொன்னியின் செல்வன்" படத்தின் புதிய மெயின் கேரக்டர் போஸ்டர்!

'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். 

Dhanush Selvaraghavan Naane Varuvaen Movie Teaser Released

இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

Dhanush Selvaraghavan Naane Varuvaen Movie Teaser Released

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த செப்டம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Dhanush Selvaraghavan Naane Varuvaen Movie Teaser Released

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. டீஸரில் இரண்டு வித விதமான கெட்-அப்பில் தனுஷ் தோன்றியுள்ளார். செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபு & யோகி பாபு டீஸரில் தோன்றியுள்ளனர். டீஸர் முழுவதும் வீரா சூரா பாடல் பின்னணியில் அமைந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா & முத்து சிற்பி இணைந்து பாடியுள்ளனர்.

 

Also Read | "இயக்குனர் சிலம்பரசன்".. படம் இயக்குவது குறித்து மனம் திறந்த சிம்பு!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Selvaraghavan Naane Varuvean Movie Teaser Released

People looking for online information on Dhanush, Naane varuvean, Naane Varuvean Movie Teaser, Selvaraghavan will find this news story useful.