VTK D Logo Top
www.garudabazaar.com

ஒரே மாசத்துல நடிகர் அஜித் இத்தனை ஊருக்கு போயிருக்காரா? MAP உடன் வெளியான சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் சாலை வழியாக இந்தியா முழுவதும் பயணம் செய்த ஊர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன.

Actor Ajith Kumar AK All india bike tour cities map

Also Read | "இயக்குனர் சிலம்பரசன்".. படம் இயக்குவது குறித்து மனம் திறந்த சிம்பு!

நடிகர் அஜித் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Actor Ajith Kumar AK All india bike tour cities map

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Actor Ajith Kumar AK All india bike tour cities map

நேற்று நடிகர் அஜித், உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.  கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் அஜித் பயணம் செய்த 15 நகரங்களின் மேப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தியா முழுவதும் அஜித் பைக் பயணம் செய்த ஊர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அஜித் இந்தியா முழுவதும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | நானே வருவேன் படத்தின் டீஸர்.. வித்தியாசமான லுக்கில் மிரட்டிய தனுஷ் & செல்வராகவன்! மரண மாஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar AK All india bike tour cities map

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Bike Ride, AK will find this news story useful.