மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இணையும் ‘நேர்கொண்ட பார்வை’ பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 20, 2019 07:11 PM
மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கல்கி எழுதிய வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கார்த்திக் பிரபு, பார்த்திபன், ஐஷ்வர்யா ராய், ஐஷ்வர்யா லக்ஷ்மி,ரியாஸ் கான் என்று ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

தற்போது இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் தான் பொன்னியின் செல்வனில் புதிதாக இணைந்துள்ளார். அதற்கு முன் ’மூணே மூணு வார்த்தை’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.