Viruman Logo Top
www.garudabazaar.com

பிரான்ஸ்க்குச் சுற்றுலா போன பிரியா பவானி சங்கர்.. பிரபல ஹீரோவின் 'காமெடி' கமெண்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார்.

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

Also Read | முதல்வர் ஸ்டாலின் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள்! CUTE வீடியோ

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

கடைசியாக  யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியில் நடித்துள்ளார்.

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

இந்நிலையில் இன்று நடிகை பிரியா பவானி சங்கர் விமானம் மூலம் ஓமன் வழியாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளார். பாரிஸ் நகரில் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு நடிகர் அசோக் செல்வன் நகைச்சுவையாக "நமக்கு சோறு தான் முக்கியம்" என பின்னூட்டம் அளித்துள்ளார்.

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

பிரியா பவானி சங்கரின் பிரான்ஸ் சுற்றுலா புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

Also Read | விருமன் படத்திற்காக களமிறங்கிய அதிதி ஷங்கர்..பிரபல போட்டோகிராபருடன் போட்டோஷூட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ashok Selvan comment about Priya Bhavani Shankar France Paris Tour

People looking for online information on Ashok Selvan, Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar France Paris Tour will find this news story useful.