Kaateri logo top
www.garudabazaar.com

'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’.

Suriya about Vaadi Vaasal Movie Art Director Jackey in Viruman Audio Launch

Also Read | VIDEO: "இது தான் கமல் சார் கொடுத்த ரோலக்ஸ் ‌வாட்ச்".. ரசிகர்களிடம் கை காட்டி சொன்ன சூர்யா!

இந்தப் படத்தை நடிகர் சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று  நடந்தது. இந்த விழாவில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.

Suriya about Vaadi Vaasal Movie Art Director Jackey in Viruman Audio Launch

இந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் பாரதிராஜா,  இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்  உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் சூர்யா, "டப்பிங்-லும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றக் கூடிய வல்லமை சூரிக்கு இருக்கிறது. தனக்குள் இருக்கும் திறமை முழுவதையும் கொடுத்துவிடுவார். இப்படத்திலும் அதை பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் இயக்கத்தில் அவர் நடிக்கும் விடுதலை படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். கருணாஸ் மாமாவிற்கு நன்றி.

Suriya about Vaadi Vaasal Movie Art Director Jackey in Viruman Audio Launch

கலை இயக்குனர் ஜாக்கி ஒரு நாடோடி. ஒரு படம் முடிந்ததும் பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விடுவார். பைக் பயணத்தில் அலாதி பிரியம் கொண்டவர். மிகச் சிறந்த பாடகரும் கூட. எங்கள் இருவரிடமும் அவருடைய பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்போது வாடிவாசல்- இல் பயணிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்" என கூறினார்.

Suriya about Vaadi Vaasal Movie Art Director Jackey in Viruman Audio Launch

வாடிவாசல் படத்தின் கலை இயக்குனராக ஜாக்கி பணிபுரிந்து வருகிறார்.

Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து வண்ணமயமான போட்டோ ஷூட்..‌ வைரலாகும் திவ்யபாரதியின் LATEST PHOTOS!

'விருமன்' பட இசை வெளியீட்டு விழாவில் 'வாடிவாசல்' பற்றி பேசிய சூர்யா.. வைரல் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suriya about Vaadi Vaasal Movie Art Director Jackey in Viruman Audio Launch

People looking for online information on Director Jackey, Karthi, Suriya, Vaadi Vaasal Movie, Viruman, Viruman Movie Audio Launch will find this news story useful.