Kaateri logo top
www.garudabazaar.com

"சூர்யாவோட அந்த சீன் நான் நடிக்கும்போது" - பாரதிராஜா நினைவுபடுத்தியதும் சிரித்த சூர்யா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

he taught me expressions says bharathiraja suriya laughed

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Also Read | "சூர்யா National Award வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

Also Read | "அவ்ளோ செல்வாக்கு.. ஆனாலும் சூர்யா, கார்த்தி ரிக்‌ஷா-ல School போனாங்க" - விருமன் விழாவில் பாரதிராஜா

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் நடிகர் சூர்யா குறித்து பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “சூர்யா.. ஒரு சீயான்.. அவனது லுக் ஃபயராக இருக்கும். நானும் அவனும் சேர்ந்து மணிரத்னம் படத்தில் நடித்தோம். அதில் ஒரு காட்சியில் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவேண்டும் என எண்ணுவேன்.. ஆக நீ போகமாட்ட.. ம்ம் என்று நான் வசனம் பேசி எக்ஸ்பிரஷன் கொடுக்க வேண்டும்.

அவன் கண்ணிலேயே பேசுவான்.. என் எக்ஸ்பிரஷனை பார்த்து.. அங்கிள் இந்த எக்ஸ்பிரஷன் பிரமாதமா இருக்கு.. கீப் இட் அப் என்று எனக்கு சொல்லிக் கொடுத்தான். ஆயிரம் பேருக்கு நான் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இவன் சொல்லிக் கொடுத்தான்” என்று பாரதிராஜா பேசியதும் சூர்யா தன்னடக்கத்துடன், அந்த சுவாரஸ்ய த்ரோபேக் நிகழ்வை நினைத்து விழுந்து சிரிக்கலானார்.

மேலும் பேசிய பாரதிராஜா, “அவன் சொன்னதும் என்னடா.. டேய். நான் கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என நினைத்தேன். அப்படி ஒரு கிரேட் வொண்டர்ஃபுல் ஆர்டிஸ்ட் சூர்யா.” என்று குறிப்பிட்டார்.

"சூர்யாவோட அந்த சீன் நான் நடிக்கும்போது" - பாரதிராஜா நினைவுபடுத்தியதும் சிரித்த சூர்யா.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

he taught me expressions says bharathiraja suriya laughed

People looking for online information on Aditi Shankar, Bharathiraja, Karthi, Shankar, Suriya, Viruman Audio Launch Viruman, Yuvan Shankar Raja will find this news story useful.