ஆர்யாவின் 'மகாமுனி' படத்துக்கு கிடைத்த சென்சார் ரிசல்ட் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மௌனகுரு' இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் 'மகாமுனி'.  ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

Arya's Magamuni got UA certificate from Censor board

அருண் பத்மநாபன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு சென்சாரில் யு\ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.