அமலா பால் நடிக்கும் "ஆடை" படத்தின் புதிய புரோமோ வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஆடை’ திரைப்படத்தில் பழம்பெரும் பின்னணி பாடகி  பி.சுசீலா பாடிய பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது

Singer Susheela song for Amala Paul’s Aadai Promo Video Out Now

‘மேயாத மான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்துள்ள திரைப்படம் ஆடை. வி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தில் அமலா பால் லீட் ரோலில் காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அமலா பாலின் தைரியமான முயற்சிக்கும், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தன. தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்ட ‘ஆடை’ படம் வரும் ஜூலை.19ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பக்தி பாடல் ஒன்றை படக்குழு ரெக்கார்ட் செய்தது. பழம்பெரும் பின்னணி பாடகி, இசையரசி என்றழைக்கப்படும் பி.சுசீலா அந்த பாடலை பாடியுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக பி.சுசீலா பாடிய பக்தி பாடல் ஒன்றை மீண்டும் ‘ஆடை’ படத்திற்காக அவர் பாடியுள்ளார். இதனை இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமலா பால் நடிக்கும் "ஆடை" படத்தின் புதிய புரோமோ வீடியோ இதோ ! வீடியோ