'Sirikki !' - சூர்யா, ஆர்யா, சாயிஷாவின் 'காப்பான்' மியூசிக் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'என்ஜிகே' படத்துக்கு பிறகு சூர்யா ஹீரோவாக நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தை கேவி ஆனந்த் இயக்க, லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Suriya Arya Mohanlal's Kaappaan Music rights got Sony Music

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படம் குறித்து கே.வி.ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி இந்த படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான சோனி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சிரிக்கி என்ற பாடல் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.