www.garudabazaar.com

Suriya 42: சூர்யா - திஷா நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரபல டெக்னீசியன்.. வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் பிரபல தொழில்நுட்ப கலைஞர் இணைந்துள்ளார்.

Suriya 42 Siruthai Siva Movie Editor Nishadh Yusuf

Also Read | நயன்தாரா - சத்யராஜ் நடித்த 'CONNECT'.. படத்தை பார்த்து மிரண்டு போன விக்னேஷ் சிவன்! வைரல் பதிவு

சமீபத்தில் ‘சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு கௌரவ அங்க்கீகரத்தையும் பெற்றிருக்கும் தென்னிந்திய முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

Studio Green & UV Creations நிறுவனங்கள் சார்பில் வம்சி கிருஷ்ணா,  பிரமோத் & KE ஞானவேல் ராஜா இப்படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Suriya 42 Siruthai Siva Movie Editor Nishadh Yusuf

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா  கூர்மை மிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார்.  DSPயின் பின்னணி இசையும் விஷுவலும்  ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. 

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார்.  வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது.

Suriya 42 Siruthai Siva Movie Editor Nishadh Yusuf

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டராக பிரபல மலையாள சினிமா எடிட்டர் நிஷாத் யூசுப் பணிபுரிகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya 42 Siruthai Siva Movie Editor Nishadh Yusuf

இவர் Saudi Vellakka (2022), Thallumaala (2022), Udal (2022), Operation Java (2021), Unda (2019) ஆகிய மலையாள படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர்.

Also Read | சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு'..தெலுங்குல இதான் பேரா? ஆஹா இதுவும் செமயா இருக்கே!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya 42 Siruthai Siva Movie Editor Nishadh Yusuf

People looking for online information on Nishadh Yusuf, Siruthai Siva, Suriya, Suriya 42 Movie will find this news story useful.