ரஜினிகாந்த் வெளியிடப்போகும் ஸ்பெஷல் வீடியோ - அதிகாரப்பூர்வ தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 03, 2020 10:35 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'தளபதி' படத்துக்கு பிறகு இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து புரோமோ வீடியோவை ரஜினிகாந்த் இன்று வெளியிடப்போவதாக லைக்கா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது.
A special exclusive promo of #DARBAR 👑 will be released by our very own #Superstar 😎 at #DARBARPreRelease event tomorrow.😌@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty @i_nivethathomas @divomovies pic.twitter.com/Ga53DvjhmR
— Lyca Productions (@LycaProductions) January 2, 2020