''விஜய்யின் ரசிகர்கள் இத்துடன் நிற்கக் கூடாது'' - பிரபல நடிகர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 16, 2019 11:43 AM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் , நயன்தாரா நடித்து வரும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்பு விஜய்யின் ரசிகப் பெருமக்கள் மரம் நடுவதில் முனைப்புடன் செயல்படுவது ஆரோக்கியமான ஆரம்பம்! இது இத்துடன் நிற்றல் கூடாது. தொடர வேண்டும்! வாழ்த்துக்கள் 👏🏻
— Vivekh actor (@Actor_Vivek) August 15, 2019