BGM Shortfilms 2019

தல அஜித்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஹெச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Rajinikanth heaps praises on Thala Ajith's Nerkonda Paarvai

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரின் போனி கபூரின் பேவியூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்தர், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

'நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான 4 தினங்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.39 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பும், அவர் இந்த கதையை தேர்ந்தெடுத்தது குறித்தும் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைப்பேசியில் நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ‘தர்பார்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அதேபோல், நடிகர் அஜித்தும் ‘தல 60’ திரைப்படத்திற்காக மீண்டும் ஹெச்.வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார். இம்மாத இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.